நாகை புதிய பஸ்நிலையத்தில் போக்குவரத்துகழக அலுவலகத்தை பயணிகள் முற்றுகை
அரசு பஸ் இயக்கப்படாததால் நாகை புதிய பஸ்நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அரசு போக்குவரத்துகழக தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் பஸ்களை இயக்கிவந்தனர். ஆனாலும் பஸ்களை இயக்க டிரைவர்கள் பற்றாக்குறையாகவே இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று 4-வது நாளாக நாகையில் போக்குவரத்துகழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சிக்கல், செம்பியான்மகாதேவி வழியாக பாலக்குறிச்சிக்கு அரசு பஸ் சென்று வருகிறது. நேற்று மதியம் பாலக்குறிச்சி செல்லும் அரசு பஸ்சுக்காக நாகை புதிய பஸ் நிலையத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் பஸ் வராததால், ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே பஸ்நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாலக்குறிச்சிக்கு செல்லும் பஸ் வேளாங்கண்ணிக்கு மாற்றி விடப்பட்டுள்ளதாகவும், பாலக்குறிச்சிக்கு உடனே பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பாலக்குறிச்சிக்கு செல்ல மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, தற்காலிக டிரைவர் மூலம் பஸ் இயக்கப்பட்டது.

Related Tags :
Next Story