தர்மபுரி ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் சங்க கூட்டம்


தர்மபுரி ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2018 4:00 AM IST (Updated: 8 Jan 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் சங்க கூட்டம்

தர்மபுரி,

எம்.ஜி.ஆர். சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் தர்மபுரி ஒன்றிய பொதுக்குழு கூட்டம் தர்மபுரி அவ்வையார் பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் அந்ததோணி தலைமை தாங்கினார். செயலாளர் சரிதா வரவேற்று பேசினார். சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொது செயலாளர் சிவாஜி, துணை தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பள்ளி சத்துணவு மையங்களை பதிவு செய்ய வலியுறுத்தும் ஆணையை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு பணியாளர்களுக்கு காலியாக உள்ள சத்துணவு மையங்களில் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும், சத்துணவு பணியில் 5 ஆண்டு பணியாற்றிய சமையலர்களுக்கு அமைப்பாளராக பதவி உயர்வும், 10 ஆண்டுகள் பணியாற்றிய உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் அண்ணாதுரை நிர்வாகிகள் மாது, சந்திரா, முனிராஜ், வெண்ணிலா, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story