மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரனார் பெயரை சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரனார் பெயரை சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2018 4:00 AM IST (Updated: 8 Jan 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரனார் பெயரை சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்,

மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரனார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரனார் பெயரை வைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் சுப்பிரமணியசாமி சாதி கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இதில் வக்கீல் மாரியப்பன், கோபால், வீரக் குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர். 

Next Story