மாவட்டம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தாலும், 94 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 4-ந் தேதி இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சுமார் 200 தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்களை பணியில் அமர்த்தி பெரும்பாலான அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 94 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தநிலையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய போக்குவரத்து பணிமனைகளில் பணிபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான பஸ்களில் குறைவான நபர்களே பயணம் செய்தனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பணிமனைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து கழகங்களில் வருவாய் வெகுவாக சரிவடைந்து இருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

Related Tags :
Next Story