நவிமும்பையில், விமான நிலைய பணியின்போது 5 என்ஜினீயர்கள் படுகாயம் வெடிவைத்து தகர்க்கப்பட்ட கற்கள் விழுந்தது


நவிமும்பையில், விமான நிலைய பணியின்போது 5 என்ஜினீயர்கள் படுகாயம் வெடிவைத்து தகர்க்கப்பட்ட கற்கள் விழுந்தது
x
தினத்தந்தி 8 Jan 2018 3:45 AM IST (Updated: 8 Jan 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை விமான நிலைய பணியின்போது, வெடிவைத்து தகர்க்கப்பட்ட கற்கள் விழுந்து 5 என்ஜினீயர்கள் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

நவிமும்பை விமான நிலைய பணியின்போது, வெடிவைத்து தகர்க்கப்பட்ட கற்கள் விழுந்து 5 என்ஜினீயர்கள் படுகாயம் அடைந்தனர்.

பாறைகள் தகர்ப்பு

நவிமும்பை பன்வெலில் விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக நேற்றுமுன்தினம் அங்குள்ள பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணி நடந்து கொண்டிருந்தது. வெடி வைக்கப்பட்டதும் அங்கு பணியில் இருந்த என்ஜினீயர் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து தூரமாக அனுப்பப்பட்டனர்.

அந்த நேரத்தில் பணியை செய்யும் தனியார் நிறுவனத்தின் 4 என்ஜினீயர்கள் மற்றும் சிட்கோ என்ஜினீயர் ஒருவர் அங்கிருந்து 300 மீட்டர் தொலைவிலேயே நின்று கொண்டிருந்து உள்ளார்.

5 என்ஜினீயர்கள் படுகாயம்

வெடி வெடித்தபோது, பாறைகள் உடைந்து சிதறின. அப்போது, சில கற்கள் பறந்து வந்து அங்கு நின்றுகொண்டிருந்த என்ஜினீயர்கள் மீது விழுந்தன. இதில், என்ஜினீயர்கள் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவரின் கை முறிந்தது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக பேலாப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story