நெல்லித்தோப்பு தொகுதி பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு படிவம் நாராயணசாமி வழங்கினார்
புதுவை நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட 24 பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு படிவம் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று நடந்தது.
புதுச்சேரி,
புதுவை நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட முருகன்கோவில் வீதியை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம், தனித்தனி பட்டாவாக துணைப்பிரிவு ஏற்படுத்தி வீட்டுமனை ஒப்படைப்பு படிவம் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மேலும் 6 பயனாளிகளுக்கு ராஜீவ்காந்தி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் வீடுகட்டும் மானியம், 7 பயனாளிகளுக்கு தொடர் நோய்க்கான நிதியுதவியை அளித்தார். நிகழ்ச்சியில்அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், துணை இயக்குனர் ராஜேஸ்வரி, நல அதிகாரி சதீஷ்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story