9-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
போச்சம்பள்ளி அருகே 9-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள மாந்தோப்பில் 9-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டை கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் மஞ்சுநாத், செல்வமணி, கார்த்திக், பாலாஜி ஆகியோர் கள ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் மன்னர் பெயர் ஏதுமில்லை. எழுத்தின் மூலம் அது 9-ம் நூற்றாண்டு என கணிக்க முடிகிறது. கல் கட்டமிடப்பட்டு குறுக்குக் கோடுகளால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேல் இரு பகுதிகளில் எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும் பெரியதாக பொறிக்கப்பட்டுள்ளன.
கீழ் இரு பகுதிகளில் இரு, இரு வரிகளாக கல்வெட்டுள்ளது. கல்லின் வலது கீழ்ப்பகுதி உடைந்துள்ளதால் கீழுள்ள மூன்று வரிகளில் எழுத்துக்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்க காலத்தில் வட்டெழுத்தும், அடுத்த நிலையில் தமிழ் எழுத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் வட்டெழுத்து நடுகற்களில் மட்டுமே அதிகமாக கிடைத்துள்ளன.
ஆனால், கொடை பற்றிய சமூக செய்திகளுடைய வட்டெழுத்து கல்வெட்டு முதல் முறையாக தற்போது தான் கிடைத்துள்ளது. எனவே, கொடை செய்திகளை தரும் தொடக்க கால சிறப்பான கல்வெட்டாக இதனைக் கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story