மயானம், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


மயானம், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

மயானம், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பந்தாரப்பள்ளி கிராமத்தில் பல்வேறு இனத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இவர்களில் யாராவது இறந்தால், அதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் புதைத்து வந்தோம். அவ்வாறு அரசிற்கு சொந்தமான இடமாகிய மயானத்தில், ஒரு சில நபர்கள் ஆக்கிரமித்து, அதன் வழியாக கால்வாய் அமைத்து, ஏரியின் மூலம் பாசனம் செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் இறந்தவர்கள் பிணத்தை புதைப்பதற்கு இடமில்லாமல் தவிக்கிறோம். மேலும் மயானம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம்.

மேலும், ஏரிக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமலும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.

எனவே, மயானம், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதுடன், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story