மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் கோரிக்கை மனு
மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் கோரிக்கை மனுவை கலெக்டர் ராமனிடம் வழங்கினர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காட்பாடி, சார்பனாமேடு, ஓல்டுடவுன், சலவன்பேட்டை போன்ற வேலூர் மாநகர பகுதிகளில் இருந்து வந்திருந்த 14 திருநங்கைகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருநங்கைகளான நாங்கள் வேலூர், சத்துவாச்சாரி, சார்பனாமேடு, காட்பாடி போன்ற மாநகர பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். நாங்கள் வீட்டு மனைப்பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதுதொடர்பாக மக்கள் குறை தீர்வு கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம். எனினும் எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. வீட்டு மனைப்பட்டா இருந்தால் நாங்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். மேலும் வாடகை வீடுகளில் வசிப்பதால் வாடகை அதிகமாக கொடுக்க வேண்டி உள்ளது. எங்களது மனு குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரியூர் 48-வது வார்டை சேர்ந்த விஸ்வநாதன்நகர், அண்ணாநகர், நரிக்குறவர் பகுதி, அவுசிங்போர்டு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மேற்கண்ட பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி மாநகராட்சி 48-வது வார்டில் உள்ளது. தற்போது எங்கள் பகுதியை 47-வது வார்டுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிகிறோம். எனவே எங்கள் பகுதி 48-வது வார்டிலேயே இருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டு வேறு வார்டுடன் சேர்க்கப்பட்டால் வாக்குரிமையை நிராகரிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாலாஜா தாலுகா அனந்தலை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலை புதுப்பிக்க கோரி பல மனுக்கள் அளித்துள்ளேன். எனினும் மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற மாற்றுத்திறனாளி பெண் சக்கர நாற்காலி கேட்டு மனு கொடுத்தார். மனு கொடுத்த உடனே அதனை சரிபார்த்த கலெக்டர் ராமன், அங்கேயே உடனடியாக சக்கர நாற்காலி வழங்கினார்.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story