கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்
கடம்பூர் அருகே ஊருணியில் சரள் மண் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அப்பகுதி விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்ட காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் அய்யலுசாமி மற்றும் கடம்பூர் அருகே உள்ள ஓனமாக்குளத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் வந்தனர். அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘கடம்பூர் அருகே உள்ள ஓனமாக்குளத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் உள்ள சரள் மண், கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் அள்ளப்பட்டு தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு கடத்தி செல்லப்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கலெக்டர் நேரில் ஊருணியை பார்வையிட்டு, இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும், அந்த தனியார் காற்றாலை நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா கவர்னகிரியை சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தமிழக அரசு சார்பில் கடந்த 1998-ம் ஆண்டு 200 வாரிசுகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசு ஆணை வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை எங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கான எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘மாவட்டத்தில் அனுமதி பெற்ற எம்சாண்ட் மணல் நிறுவனங்களின் முகவரிகளை பத்திரிகைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் கட்டுமான பணியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களுக்கும் தரமான அரசு அனுமதி பெற்ற எம்சாண்ட் மணல்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். அந்த கட்டுமான பணிகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள போலி எம்சாண்ட் மணல் நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் கொண்டாட வசதியாக ரோச் பூங்கா, நேரு பூங்கா, முத்துநகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மாவட்ட பா.ஜனதா துணை தலைவர் செல்வராஜ் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில், ‘பேய்க்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மணிமுத்தாறு அணை 3-வது மற்றும் 4-வது ரீச் நீரை பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வருடம் அணை நிரம்பியும், இதுவரை 3-வது மற்றும் 4-வது ரீச் குளங்களுக்கு முறைப்படி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமான பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story