28 வார கருவை கலைக்க கர்ப்பிணிக்கு அனுமதி மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மும்பையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
மும்பை,
தன்னுடைய வயிற்றில் வளரும் 28 வார கரு, பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும், அதனை பிரசவித்தால் தனக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் கருவை கலைக்க அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தார்.
பின்னர், ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஜே.ஜே.ஆஸ்பத்திரி டாக்டர்கள், அந்த பெண்ணை பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், வயிற்றில் வளரும் கருவுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், 28 வாரம் ஆன போதிலும் வயிறு இன்னமும் உருவாகாததும் கண்டறியப்பட்டது.
இதனை நேற்று பரிசீலித்த நீதிபதிகள் ஆர்.எம்.போர்தி மற்றும் ராஜேஷ் கேத்கர் ஆகியோர், கருவின் உடல்நிலையையும், பெண்ணின் மனவேதனையையும் கருத்தில் கொண்டு, அதனை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
நமது நாட்டு சட்டப்படி, 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க சட்டத்தில் அனுமதி இல்லை. எனினும், அந்த பெண்ணின் மனநிலையை கருதி, நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.