செங்குன்றத்தில் ஆபத்தான மழைநீர் கால்வாய்


செங்குன்றத்தில் ஆபத்தான மழைநீர் கால்வாய்
x
தினத்தந்தி 10 Jan 2018 3:27 AM IST (Updated: 10 Jan 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் ஆபத்தான மழைநீர் கால்வாய் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்குன்றம்,

செங்குன்றம், ஜி.என்.டி சாலையின் இருபுறங்களிலும் பேரூராட்சி சார்பாக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கால்வாயில் பல இடங்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டதால் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மழைநீர் செல்ல வழியின்றி மழைநீரும், கழிவுநீரும் ஜி.என்.டி சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ஜே.சி.பி எந்திரங்கள் உதவியுடன் மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்து மழைநீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர். அப்போது கால்வாயின் பல இடங்களில் சிமெண்டு சிலாப்பை வைத்து மீண்டும் மூடாமல் சென்று விட்டனர்.

இதேபோல் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் முதியோர் மற்றும் குழந்தைகள் அந்த கால்வாய் பள்ளத்தில் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆபத்தை உருவாக்கும் மழைநீர் கால்வாயை உடனடியாக மூடும்படி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story