பொங்கல் பண்டிகை கொண்டாட அனுமதிக்க கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் பண்டிகை கொண்டாட அனு மதிக்க கோரி அரியலூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்,
அரியலூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை அணிந்தும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டபோது இன்று (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாட கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் இன்று முதல் 16-ந்தேதி வரை கல்லூரி விடுமுறை என கல்லூரி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொங்கல் பண்டிகை கொண்டாட அனுமதிக்க கோரி கோஷமிட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், நாளை (வெள்ளிக்கிழமை) கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என்றும், பொங்கல் பண்டிகையை மாணவர்கள் கல்லூரியில் கொண்டாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story