சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கஞ்சி காய்ச்சி போராட்டம்


சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கஞ்சி காய்ச்சி போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:30 AM IST (Updated: 11 Jan 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினார்கள்.

குலசேகரம்,

ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அரசமூடு சந்திப்பு முதல் உண்ணியூர் கோணம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு சாலை சேதமடைந்து உள்ளது.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 மாதங்களுக்கு முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அப்போது 15 நாட்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் உறுதி அளித்தனர். ஆனால் அதன்படி சாலை சீரமைக்கப்படவில்லை.

கஞ்சி காய்ச்சி போராட்டம்

இதைத்தொடர்ந்து சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மாலை குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினார்கள். இதற்கு குலசேகரம் வட்டார செயலாளர் விஸ்வம்பரன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் அண்ணாதுரை, ஸ்டாலின்தாஸ், நடராஜன், செல்வராஜ், ஜெயராஜ், ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சாலை வருகிற 30-ந்தேதிக்குள் சீரமைக்கப்படும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story