நாமக்கல்லில் பட்டாசு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் பட்டாசு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:00 AM IST (Updated: 11 Jan 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பட்டாசு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்,

சிவகாசியின் பாரம்பரியமிக்க சுதேசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் லோகநாத் தலைமை தாங்கினார். செயலாளர் லோகேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க பொருளாளர் செல்வம் நன்றி கூறினார். 

Next Story