போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:15 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

உண்ணாவிரதப்போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை, பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், பேரணி போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சையில் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தஞ்சை மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் தற்காலிக பணியாளர்களைக்கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. 

Next Story