போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி,
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, தமிழ்நாட்டில் 8 நாட்களாக 1½ லட்சம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம்
தமிழக அரசு இதற்கான தீர்வு காணாமல் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பி பொய் வழக்கு போட்டு வருகிறது. இதை கைவிட்டு விட்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைக்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story