ராட்சத காற்றாடியின் பாகம் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியது போக்குவரத்து பாதிப்பு
திருச்சி அருகே ராட்சத காற்றாடியின் பாகம் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே புதுக்குடி பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் ராட்சத காற்றாடியின் பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ராட்சத காற்றாடியின் பெரிய குழாய் போன்ற ஒரு பாகத்தை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சேலத்தில் உள்ள காற்றாலை நிறுவனத்திற்கு புறப்பட்டது.
இந்த காற்றாடியின் பாகமானது சுமார் 40 அடி நீளம் மற்றும் அதிக எடை கொண்டதாகும். லாரியை உத்தரபிரதேச மாநிலம் பபேயி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் துபே(வயது 38) என்பவர் ஓட்டினார். நள்ளிரவு 2 மணியளவில் அந்த லாரி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. நெ.1 டோல்கேட் ஒய் ரோடு அருகே வந்தபோது குறுகிய வளைவில் லாரியை டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரங்கள் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் சிக்கின.
மீட்பு பணி
இதனால் லாரியின் பின் பகுதி சாய்ந்து சாலையின் குறுக்கே நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். நள்ளிரவு என்பதால் லாரியை மீட்கும் பணியை போலீசார் கைவிட்டனர். நேற்று காலை 3 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கியது.
இதற்கிடையே சென்னை, திருச்சி, சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் கொள்ளிடம் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
5 கிரேன்கள் உதவியுடன்...
இதற்கிடையே லாரியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டதால் மீட்பு பணி ”ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நெ.1 டோல்கேட் ரவுண்டானாவில் தடுப்பு பலகை அமைத்து வாகனங்களை மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் மாலையில் கூடுதலாக 2 சிறிய கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 5 கிரேன்கள் உதவியுடன் போலீசார் மற்றும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரவில் லாரி மீட்கப்பட்டது.

Related Tags :
Next Story