காதல் தொல்லையால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


காதல் தொல்லையால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2018 4:45 AM IST (Updated: 12 Jan 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

காதல் தொல்லையால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை வாலிபர் கைது செய்தனர்.

புனே,

புனே அவேத் கஸ்தூர்பா காலனியை சேர்ந்த சிறுமி நேகா சவுத்ரி(வயது15). இவரது தந்தை இறந்து விட்டதால், தாயுடன் வசித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக நேகா சவுத்ரி பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வீட்டு வேலை செய்து வந்தார். மேலும் சிறுமியின் தாய் குடும்ப வருமானத்திற்காக வேலைக்கு வெளியே சென்று வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரிஷிகேஷ் (20) என்பவர் சிறுமியிடம் நைசாக பேசி காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்சியடைந்த நேகா சவுத்ரி சம்பவம் குறித்து தாயிடம் தெரிவித்தாள். இதற்கு சிறுமியின் தாய் ரிஷிகேஷ்சை அழைத்து கண்டித்து உள்ளார்.

இதனை பொருட்படுத்தாத ரிஷிகேஷ் மீண்டும் சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த நேகா சவுத்ரி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சதுரங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ரிஷிகேசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.



Next Story