காணும் பொங்கலன்று அமிர்தி பூங்கா, மோர்தானா அணை, ஸ்ரீபுரத்துக்கு சிறப்பு பஸ்கள்
காணும் பொங்கலன்று வேலூரில் இருந்து அமிர்தி பூங்கா, மோர்தானா அணை மற்றும் ஸ்ரீபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
தமிழர்களின் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று காலை பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் முன்பாக புதிய பானையில் பொங்கல் வைப்பார்கள்.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. மாடு மற்றும் அதனை வளர்ப்போர், விவசாயிகள், மாட்டை பராமரிப்பவர்களுக்கும் உள்ள உன்னத உறவை சிறப்பிக்கும் வகையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்படும். கிராமங்களில் கால்நடை வளர்ப்போர் மாட்டுப்பொங்கலை பாரம்பரிய சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள். மேலும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும்.
காணும் பொங்கல்
அதைத்தொடர்ந்து வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலன்று பொதுமக்கள் அருகே உள்ள பூங்கா, அணைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்வார்கள்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம், அமிர்தியில் உள்ள சிறு வனஉயிரின பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். காணும் பொங்கலன்று வேலூர் பழைய பஸ் நிலையங்களில் இருந்து அமிர்தி பூங்காவிற்கும், ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கும், மோர்தானா அணைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்கள்
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், “அமிர்தி பூங்காவிற்கும், ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கும் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதற்காக வேலூரில் இருந்து ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு 10 சிறப்பு பஸ்களும், அமிர்தி பூங்காவிற்கு 5 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
மேலும் குடியாத்தத்தில் இருந்து மோர்தானா அணைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story