வேன் கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்


வேன் கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

வேன் கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

அம்பை,

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் அந்தோணியம் மாள் (வயது 60). இவர் தனது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் ஒரு வேனில் நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு வந்தார். அங்கு கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை மகாராஜன் (40) ஓட்டினார். வேன் வீரவநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த அந்தோணியம்மாள், சக்திவேல், ஆதிலட்சுமி, காளியப்பன் (34) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story