அம்பேத்கர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் கிராம மக்கள் மறியல் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மேச்சேர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியதை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் செய்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியில் கூனாண்டியூர் செல்லும் சாலை அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம மனிதர்கள் சிலர் இந்த சிலையின் முகத்தில் சிவப்பு கலர் பெயிண்டை ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள் அம்பேத்கர் சிலை மீது சிவப்பு கலர் பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை 7.30 மணியளவில் மல்லிகுந்தம் அம்பேத்கர் சிலை முன்பு உள்ள கூனாண்டியூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைசெயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் மெய்யழகன் முன்னிலை வகித்தார். அப்போது அவர்கள் அம்பேத்கர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாஸ்கர், அண்ணாமலை, மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் தரப்பில், புகார் கொடுத்தால் அது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் காலை 10.30 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அம்பேத்கர் சிலையில் பதிவாகி இருந்த கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைசெயலாளர் கலைச்செல்வன் மேச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story