மாவட்ட செய்திகள்

தீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம் + "||" + A fire broke out in the fire and burned the cigarettes of the dead

தீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம்

தீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம்
கொட்டகையில் தீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம்
குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. மாடுகளையும் இவர் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் மாடுகளை கொட்டகையில் கட்டினார். இந்த நிலையில் நள்ளிரவு மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே செல்வம் குடும்பத்தினர் அங்கு வந்தபோது கொட்டகை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். அதற்குள் கொட்டகைக்குள் இருந்த சினைப்பசு மாடு தீயில் சிக்கி இறந்தது.


இந்த சம்பவத்தில் 2 மாடுகள் தீக்காயங்களுடன் தப்பியது. மாட்டு கொட்டகை எரிந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார். விடிந்தால் மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நாள். இந்த நிலையில் மாட்டுக்கொட்டகை எரிந்து சினைப்பசு மாடு எரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.