கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு
கும்பகோணம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் கிராமத்தில் காடுவெளியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் குலதெய்வமாக காடுவெளியம்மனை வழிபட்டு வருகிறார்கள். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
காணும் பொங்கல் என்பதால் நேற்று கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மூலவர் சன்னதியில் இருந்த காடுவெளி அம்மன் சிலையை காணவில்லை. கோவிலில் இருந்த மின் விளக்குகள், கெடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
விசாரணையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் சிலையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல் அதே பகுதியில் கீழத்தெருவில் உள்ள பழமையான ஆஞ்சநேயர் கோவில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்தையும், சிலைகளையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story