நாமக்கல் அருகே மாநில பெண்கள் கபடி போட்டி 18 அணிகள் பங்கேற்பு
நாமக்கல் அருகே உள்ள தூசூரில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள தூசூரில் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பெண்கள் கபடி போட்டி தூசூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்று வருகிறது. இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் அருணகிரி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை, கோவை, சேலம், பொள்ளாச்சி, திருச்சி, உடுமலைப்பேட்டை, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 18 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.
கைப்பந்து போட்டி
இதேபோல் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியும் 2 நாட்கள் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
இதில் ஈரோடு பி.கே.ஆர். அணி முதலிடத்தையும், சென்னை ஜி.கே.எம். அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Related Tags :
Next Story