வீரபாண்டி ஏரியில் பிணம் மீட்பு: வாலிபர் கழுத்து அறுத்துக்கொலை போலீசார் தீவிர விசாரணை
வீரபாண்டி ஏரியில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் மிதந்தது. அவரை கொலையாளிகள் கடத்தி வந்து தீர்த்து கட்டினரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டையாம்பட்டி,
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஏரியில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. சிவப்பு நிறத்தில் கால் சட்டையும், சிவப்பு நிறத்தில் இடுப்பில் கயிறும் அணிந்து இருந்தார். நாக்கு தடித்த நிலையிலும், தோல் உரிந்த நிலையிலும் இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பிணத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபரை மர்ம நபர்கள் கடத்தி வந்து தீர்த்து கட்டிவிட்டு உடலை ஏரியில் வீசி இருக்கலாமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story