கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்ததால் ஆத்திரம் அண்ணிக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது


கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்ததால் ஆத்திரம் அண்ணிக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 18 Jan 2018 3:45 AM IST (Updated: 18 Jan 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்ததால் அண்ணியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் சூரியாநகரை சேர்ந்தவர் ஹரிலூயிஸ். இவருடைய மகன்கள் கோபால்(40), கணேசன்(35), ஜெபராஜ் (வயது30). தொழிலாளி. அண்ணன்,தம்பிகள் அருகருகே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது அண்ணன் கோபாலின் வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. உடனே ஜெபராஜ் அங்கு சென்று பார்த்தபோது கோபால் மனைவி சித்ரா, கணேசனின் மனைவி வனஜாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கர்ப்பமாக இருந்த வனஜாவை, சித்ரா வயிற்றில் எட்டி உதைத்ததால் வீடு முழுவதும் ரத்தமாக இருந்துள்ளது. இதனை கண்ட ஜெபராஜ் ஆத்திரமடைந்து, வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சித்ராவின் கையில் வெட்டினார்.

கைது

பின்னர் ஜெபராஜ் அந்த கத்தியுடன் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெபராஜின் மனைவி கிரிஜாவின் சகோதரி வனஜா என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story