ஒரு படகில் இருந்து மற்றொரு படகில் ஏறியபோது கடலில் விழுந்த மீனவர் மூழ்கி சாவு
ஒரு படகில் இருந்து மற்றொரு படகில் ஏறியபோது மீனவர் கடலில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார். சகோதரர் மகன் திருமணத்தில் பங்கேற்க புறப்பட்ட போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் ஜான்பால் தெருவை சேர்ந்தவர் ரெஜினால்டு (வயது 51). இவர் கடந்த 12-ந்தேதி முட்டத்தில் இருந்து விசைப்படகில் 16 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். இவர்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்தனர். ஆனால் மீன்கள் அதிகளவில் கிடைக்காததால் கரை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ரெஜினால்டு தனது சகோதரரின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கரை திரும்பவேண்டும் என்று சகமீனவர்களிடம் தெரிவித்தார். இன்னொரு மீனவரும் அவசரமாக கரை திரும்பவேண்டும் என்று கூறினார்.
இதனால் சக மீனவர்கள் அவர்கள் இருவரையும் அந்த வழியாக கரை திரும்பிக்கொண்டிருந்த விசைப்படகு மீனவர்களிடம் உதவி கேட்டனர். அவர்களும் இருவரையும் கரைக்கு அழைத்து செல்வதாக கூறினார்கள்.
புறப்பட தயாரான ரெஜினால்டும் மற்றொரு மீனவரும் தங்கள் படகில் இருந்து கரை திரும்பும் விசைப்படகிற்கு செல்வதற்காக கயிற்றை பிடித்துக்கொண்டு ஏறினார்கள். அப்போது ரெஜினால்டு கயிற்றை பிடித்துக்கொண்டு அந்த படகில் ஏறியபோது எதிர்பாராத விதமாக நடுக்கடலில் தவறி விழுந்து மூழ்கினார். உடனே விசைப்படகில் இருந்த மீனவர்கள் அவரை மீட்டு வேகமாக கரைக்கு கொண்டு வந்தனர்.
முட்டத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரெஜினால்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து குளச்சல் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரெஜினால்டுக்கு பிரிஜித்மேரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். பிரிஜித்மேரி நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரெஜினால்டு இறந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story