போலீசாரை கண்டித்து சரக்கு வாகன ஓட்டுனர்-உரிமையாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
போலீசாரை கண்டித்து சரக்கு வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நேற்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அப்போது அதில் ஆட்களை ஏற்றி வரும் ஓட்டுனர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தும், அவர்களது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தும் கெடுபிடி செய்து வருகின்றனர்.
இதனை கண்டித்து சரக்கு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி எதிரே உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும், சரக்கு வாகனங்களில் தொழிலாளி ஒருவரை அனு மதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரக்கு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சரக்கு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அங்கிருந்து புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்ரமணியனை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வாய்மொழியாக தெரிவித்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் சரக்கு வாகனங்களில் சரக்குகளை ஏற்றி கொண்டு செல்கிறோம். இந்த சரக்குகளை இறக்குவதற்கு ஒரு சரக்கு ஏற்று பவர்(லோடுமேன்) தேவை. இதனால் நாங்கள் எங்கள் சரக்கு வாகனத்தில் ஒரு தொழிலாளியை ஏற்றி செல்ல அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தாலும், அனைத்து ஆவணங்களை சரியாக வைத்திருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி போலீசார் எங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார்கள்.

Related Tags :
Next Story