பாப்பாரப்பட்டி, கடத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
பாப்பாரப்பட்டி, கடத்தூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பென்னாகரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாபு ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜி, துணைத்தலைவர் மாதேஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குட்டி, ஊராட்சி செயலாளர்கள் ராஜேந்திரன், நடராஜ் நிர்வாகிகள் சுகுமார், இளங்கோ, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூர்
கடத்தூரில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அன்பழகன், அய்யாதுரை, கந்தசாமி, கண்ணன், ரவி, துரை, சந்தோஷ், சிவரஞ்சனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story