காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க விளை நிலங்களை சுற்றி சேலைகளை கட்டிய விவசாயிகள்
விளை நிலங்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க விளை நிலங்களை சுற்றிலும் விவசாயிகள் சேலைகளை கட்டி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தர்மபுரி,
தமிழகத்தில் வனப்பகுதிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதம் வனப்பகுதியாகும். வனப்பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்த நிலையில் வனப்பகுதிகளையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் விளை நிலங்களில் நெல், சோளம், கேழ்வரகு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள்.
இந்த பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடையாகும் சூழலில் வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி விளை நிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவது விவசாயிகளை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. இந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக வனப்பகுதிகளையொட்டி உள்ள கிராமங்களில் உள்ள விளை நிலங்களை சுற்றி பல வண்ண சேலைகளை வரிசையாக கட்டி வைக்கும் முறை அதிகரித்து வருகிறது.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-
நிரந்தர தீர்வு
விளை நிலங்களில் பல வண்ண சேலைகளை கட்டி வைக்கும்போது அவை காற்றில் லேசாக அசையும் நிலை ஏற்படுகிறது. இதனால் விளைநிலங்களில் நுழைவதற்காக வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் சேலைகள் கட்டப்பட்டுள்ள பகுதியில் ஆட்கள் நடமாடுவதாக நினைத்து அச்சமடைந்து விளை நிலத்திற்குள் நுழையாமல் திரும்பி செல்லும் வாய்ப்பு உள்ளது.
பயிர்சேதத்தை தவிர்க்க இந்த முறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர்சேதத்திற்கு இது நிரந்தர தீர்வு அல்ல. காட்டுப்பன்றிகள் வனப்பகுதிகளில் இருந்து விளைநிலங்களுக்கு உணவு தேடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story