வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு: தென்தாமரைகுளத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்தாமரைகுளத்தில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தென்தாமரைகுளம்,
இனயத்தில் அமைய இருந்த வர்த்தக துறைமுகம் கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும், கீழமணக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆய்வு பணிகளும் நடந்தது. இங்கு துறைமுகம் அமையும் பட்சத்தில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி மீனவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து துறைமுக எதிர்ப்பு போராட்டக்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் கிராமம் வாரியாக துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதன்படி, குமரி சமூக விடியல் இயக்கம் சார்பில் தென்தாமரைகுளம் சந்திப்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இயக்கத்தின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முருகரசு வரவேற்று பேசினார்.
துறைமுக எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, தென்தாமரைகுளம் பனிமய அன்னை ஆலய பங்குத்தந்தை ராஜன், மேல மணக்குடி ஆலய பங்குத்தந்தை கிளிட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர். இதனால், தென்தாமரைகுளம் சந்திப்பில் டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகைகடைகள் போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story