திருநள்ளாறு கோவில் சனி பகவான் சன்னதியில் சுஷ்மா சுவராஜ் வழிபாடு
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சாமி கோவிலில் சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம் செய்து மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், தனது மகளுடன் வழிபட்டார்.
காரைக்கால்,
காரைக்காலுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் வந்தார். நேற்று முன்தினம் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்தார். இதன்பின் அங்கேயே தங்கினார். நேற்று அதிகாலை 5.45 மணிக்கு திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசாமி கோவிலுக்கு தனது மகளுடன் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சென்றார். அவர்களை தேவஸ்தான நிர்வாக அதிகாரி விக்ரந்த்ராஜா, கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் வரவேற்றனர்.
சொர்ணகணபதி, சுப்ரமணியர், மூலவர் தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர் மற்றும் அம்பாள் சன்னதிகளில் அவர்கள் வழிபட்டனர். பிறகு சனீஸ்வரபகவான் சன்னதிக்கு அருகில் உள்ள யாகசாலையில் நடைபெற்ற நவக்கிரக சாந்தி ஹோமத்தில் இருவரும் கலந்து கொண்டனர். ஹோமம் சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றது. ஹோமம் நிறைவடைந்ததும் தர்பாரண்யேஸ்வரர், மரகதலிங்கம் மற்றும் சனீஸ்வரபகவான் ஆகியோருக்கு விசேஷ அபிசேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காலை 9 மணியளவில் அவர் கோவிலில் இருந்து புறப்பட்டார்.
இந்தநிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக் கண்ணன், பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கேசவன் மற்றும் மாநில, மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story