பெண்களின் மனசு.. பேசும் விதம் புதுசு..
*மகளுக்கு 18 வயது. தாயார், ‘என் மகள் ரொம்ப நல்ல பொண்ணுதான். எப்போதும் அமைதியாகத்தான் பேசுவாள். ஆனால் திடீரென்று மாதத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தேவையில்லாமல் கூச்சல்போட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிடுவாள்.
கையில் கிடைத்ததை தூக்கி எறிந்து கலாட்டா செய்வாள். காரணம் என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை’ என்கிறார்.
*அந்த பெண்ணுக்கு 28 வயது. கர்ப்பிணி. கணவர் வீட்டில் வசிக்கும் அவர், ‘என் மாமியார் அருகில் வந்தாலே எனக்கு குமட்டிக்கொண்டு வாந்தி வருகிறது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் சீக்கிரமே என் தாயார் வீட்டிற்கு செல்லவேண்டும். இல்லாவிட்டால் எனக்கு என்ன ஆகும் என்றே எனக்குத் தெரியாது’ என்கிறார்.
* இந்த குடும்பத்தலைவிக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளின் தாய். அவர், ‘காலை எழுந்து சமையல் அறையை நோக்கிச்செல்லும்போதே எனக்கு தலைசுற்றத் தொடங்கும். சமையல் வேலை எதிலும் ஆர்வம் போகாது. படுக்கை அறையில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கும் கணவரை ஆத்திரத்தோடு எட்டிப்பார்ப்பேன். அவரை கடித்து தின்றுவிடலாம் என்பதுபோல் இருக்கும்’ என்கிறார்.
இவை மூன்று விதமான சம்பவங்களாக இருந்தாலும், இவர்கள் மூன்று விதமான பெண்களாக இருந்தாலும், மூவருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு ஒன்றுதான்! அது மனஅழுத்தம்!!
அவர்களுக்கு மனஅழுத்தம் தோன்ற என்ன காரணம்?
** அமைதியான சுபாவம் கொண்ட 18 வயது பெண்ணுக்கு மனஅழுத்தம் தோன்ற அவளது மாதவிலக்கு நாட்கள் காரணம். மாத விலக்கு ஏற்படுவதற்கு இரண்டு நாட் களுக்கு முன்பே அவளை அறியாமலே அவளுக்கு அளவுக்கு அதிகமான கோபம் உருவாகிறது. அவ்வப்போது அது தலைகாட்டி, ‘ஏன் இந்த பொண்ணு இப்படி நடந்து கொள்கிறாள்? இவளுக்கு திடீர்னு என்ன ஆச்சு?’ என்ற கேள்விகளோடு சலசலப்பையும் உருவாக்கிவிட்டு, இரண்டொரு நாட்களில் கடந்து போய்விடுவதை கண்டறிய முடிந்தது. இதை ‘மாதவிலக்கு கால மனஅழுத்தம்’ என்று எடுத்துக்கொள்ளலாம். மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட் களுக்கு முன்பிருந்து, இந்த மன அழுத்தம் எல்லா வயது பெண்களையும் தாக்குகிறது என்கிற உண்மையை பெண்களும், அவர்களது குடும்பத்தினர்களும் உணர்ந்துகொண்டால், இந்த மனஅழுத்தத்தால் ஏற்படும் சிக்கலை குறைக்கலாம்.
**28 வயது கர்ப்பிணி பெண்ணை எடுத்துக்கொண்டால், அவள் சுத்தத்துக்கு சொந்தக்காரி. தனது வீடு, படுக்கை, உடை அனைத்தும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று விரும்புபவள். கணவரைக்கூட குளிக்காமல் தன் அருகில் அண்டவிடமாட்டாள். ஆனால் மாமியார் நேர்மாறானவர். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் அவர் குளிப்பார். உடை மாற்றுவார். அதனால் அவரிடமிருந்து வியர்வை வாடை வீசிக்கொண்டே இருக்கும். கர்ப்பக்காலத்தில் ஏற்கனவே வாந்தியால் பாதிக்கப்பட்டிருந்த அவள், மாமியார் அருகில் வரும்போது கூடுதலான மனஅழுத்தத்திற்கு உள்ளானாள். அது கட்டுப்படுத்த முடியாத வாந்தியாக மாறிவிட்டது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், கர்ப்பிணிப் பெண்களை அவர்களது இயல்புத்தன்மைக்கு ஏற்றவாறு அணுகுகிறவர்களின் அருகாமை மட்டுமே அவர் களுக்குத்தேவை. அல்லது அந்த கர்ப்பிணி பெண்களின் எதிர்பார்ப்பிற்கு தக்கவாறு தங்களை மாற்றிக்கொண்டு அவர்களை அணுகவேண்டும். அவ்வாறு செய்தால் கர்ப்பகால மனஅழுத்தத்தை ஓரளவு குறைத்துவிட முடியும்.
**40 வயது குடும்பத்தலைவியின் ‘சமையல் அறை மனஅழுத்தத்திற்கு’ என்ன காரணம்?
அந்த பெண் தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர். அவருக்கு கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் வேலைபார்க்கிறார்கள். அவர், அவர்களை எளிதாக கையாளுகிறார். ஆனால் தனது வீட்டு சமையல் அறையை அவர் சமாளிக்க முடியாத போர்க் களம் போன்று கருதுகிறார். அதற்கு காரணம் அவரது கணவர். வீட்டு சமையலுக்கு வேலைக்காரர்களை வைத்துக்கொள்ள கணவர் சம்மதிக்கவில்லை. மனைவியே சமைக்கவேண்டும் என்று அடம் பிடித்தார்.
மனைவி சமைத்துக்கொடுப்பதை மகிழ்வாக சாப்பிடாமல், ‘உன் சமையல் என் அம்மா கைப்பக்கும் மாதிரி ருசியாக இல்லை. சமையல் அறையை என் அம்மா எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார். நீ அங்கும் இங்குமாக பாத்திரங்களை பரப்பிப்போட்டிருக்கிறாய்’ என்பார். அதுவும் அவர் தாமதமாக எழுந்து, அதிகாலையிலே விழித்த மனைவி அவசரஅவசரமாக சமைத்துக்கொண்டிருக்கும்போது தேடி வந்து, குறைகளை அடுக்குவார். இதை மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் பக்க நியாயத்தை கணவரிடம் எடுத்துச் சொல்லும் தைரியமும் அவருக்கு இல்லை. கணவர் மீதான ஆத் திரத்தை எல்லாம் தனது மனதுக்குள்ளே போட்டு அமுக்கிக்கொண்ட அந்த 40 வயது குடும்பத்தலைவி அதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளானார். ஆகவே சமையல் அறை அவருக்கு ஒரு சிறைச்சாலை போன்று ஆனது.
‘பேம்லி கவுன்சலிங்’குக்கு பிறகு மனைவியின் மனஅழுத்தத்திற்கான காரணத்தை கணவரும், குழந்தைகளும் புரிந்துகொண்டார்கள். மனம்விட்டுப் பேசினார்கள். காலை நேரங்களில் கணவரும் சமையல் அறைக்குள் மனைவிக்கு உதவி செய்ய வந்தார். அதன் பின்புதான் சமையல் அறை வேலை ஒன்றும் எளிதானதல்ல என்ற உண்மை கணவருக்கு புரிந்தது. காலப்போக்கில் சமையல் அறை மனஅழுத்தத்தில் இருந்து அந்த பெண் விடுபட்டார்.
இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, பொது இடங்களில் பயணம் செய்வது, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உருவாகாமல் தடுக்க தேவையான அளவு தூக்கம் மிக அவசியம்.
பெண்கள் தூக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ‘எவ்வளவு நேரம் தூங்கினாலும் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சோம்பேறித்தனம் இருந்தால்- கண்களை திறக்க முடியாமல், அப்படியே மணிக்கணக்கில் படுத்திருக்கலாம் என்று தோன்றினால்- எப்போதும் கசப்பான சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால்- எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள், என் வாழ்க்கை மட்டும்தான் இவ்வளவு மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்துக்குள்ளே உழன்று கொண்டிருந்தால்- நீங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம். இதில் இருந்து மீள நீங்கள் மனோதத்துவ நிபுணரை அணுகுவதற்கு முன்னால், உடல் நலத்தை பரிசோதிக்க டாக்டரை சந்திக்கவேண்டும். ஏன்என்றால் மேற்கூறிய அறிகுறிகளில் பெரும்பாலானவை பெண்களின் உடல்நலத்தோடும் சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மன நலத்திற்கு ஆரோக்கியமான உடல் நலமும் அவசியம்.
மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தால் அதில் இருந்து மீள சில எளிய வழிகள்:
*மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் சிந்தனையை திசை திருப்பவேண்டும். அதற்கு சுயிங்கம் துணைபுரியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் சுயிங்கத்தை வாயில்போட்டு நிதானமாக மெல்லுங்கள்.
*எல்லா விஷயங்களையும் சீரியஸ் ஆக்குவதை கைவிடவேண்டும். ‘இதெல்லாம் சாதாரணம் அப்படியே விட்டுவிடுவோம்! சரி.. நடந்தது நடந்துபோச்சு அதுக்கு என்ன செய்ய முடியும்!’ என்று நினைத்து சிறிய விஷயங்களை மனதில் போட்டுவைக்காமல் அப்போதே அப்புறப்படுத்திவிடுங்கள்.
*‘நான் ரொம்ப சுத்தமானவள். அதனால் என்னைப் போல் நீங்களும் சுத்தமாக இருக்கவேண்டும். நான் ரொம்ப நல்லவள். அதுபோல் நீங்களும் நல்லவராக இருக்கவேண்டும். நான் கடும் உழைப்பாளி. அதுபோல் நீங்களும் உழைக்கவேண்டும்’ என்று உங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மீது திணித்து, அவர்களும் அதுபோல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
*பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அவைகளை வாசிக்கும்போது உங்கள் உலகத்தில் இருந்து விடுபட்டு அந்த புத்தகத்தின் கருத்து உலகத்திற்கு நுழைந்துவிடுங்கள். நாய், பூனை போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பிராணியை வளருங்கள். அதனுடன் பொழுதை செலவிடுங்கள். தினமும் தியானம் மேற்கொள் ளுங்கள்.
-விஜயலட்சுமி பந்தையன்.

Related Tags :
Next Story