வருகிற 3-ந் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் போராட்டம்
வருகிற 3-ந் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஈரோட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கூறினார்.
ஈரோடு,
ஆண்டாள் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமி தலைமை தாங்கினார். பேரூர் ஆதினம் சாந்தலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ண பிரியர், சுதர்சன ராமானுஜ தாசன், கோவர்தன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் செந்தில் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி தவறாக பேசி உள்ளார். அதற்காக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக வலைதளம் மூலம் மன்னிப்பு கேட்டால் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க செல்லவில்லை.
கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும்கூட பரவாயில்லை அவர் ஆண்டாளை உன்மையாகவே தாயாக நினைத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து நான் பேசியது தவறு என்று கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் வந்து கேட்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் யார் சொல்லியும் எங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவில்லை. பக்தர்கள், அரசாங்க அதிகாரிகளின், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர் வேண்டுகோளுக்கு இணங்க எங்களுடைய உண்ணாவிரத போராட்டதை கைவிட்டோம்.
அரசாங்க அதிகாரிகளிடம் எங்களுடைய கோரிக்கையை வைத்தோம். அவர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்பதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினார்கள். நாங்கள் அதற்கு சரி என்று சொன்னோம். பிப்ரவரி மாதம் 3-ந் தேதிக்குள் அவர் மன்னிப்பு கேட்வில்லை என்றால் நாங்கள் அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடு ரோட்டில் அமர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை மீண்டும் நடத்துவோம் என்றும் கூறினோம்.
அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டனர். அதற்காகத்தான் நாங்கள் எங்களுடைய உண்ணாவிரத போராட்டதை கைவிட்டோமோ தவிர எந்த அரசியல்வாதிக்காவும் இல்லை. எங்களுடைய போராட்டத்தை கைவிடக்கோரி யாரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story