மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு கணவர் கைது


மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு கணவர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2018 4:13 AM IST (Updated: 22 Jan 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து இளம்பெண்ணின் கணவரை கைது செய்தனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 25). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவகாமி(23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் வேல்முருகன் மதுகுடித்துவிட்டு சிவகாமியை திட்டி, தாக்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்த வேல்முருகனை, சிவகாமி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு சிவகாமி உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார்.

கணவர் கைது

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சிவகாமியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சிவகாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவகாமி நேற்று பரிதாபமாக இறந்தார். முன்னதாக சிவகாமியிடம் ஆலடி போலீசார் வாக்கு மூலம் பெற்றனர். அப்போது சிவகாமி, கணவர் வேல்முருகன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். 

Next Story