திருபுவனை அருகே விபத்து ஏரிக்கரையில் தனியார் பஸ் மோதியது 20 பேர் காயம்
திருபுவனை அருகே ஏரிக்கரையில் தனியார் பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
திருபுவனை,
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று மாலை 5.30 மணியளவில் சுமார் 50 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று வந்தது. புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் திருபுவனை ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் உள்ள ஏரிக்கரையின் மீது ஏறி மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனே பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்த பஸ்சில் வந்த பயணிகளை மாற்று பஸ் மூலம் புதுவைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story