பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதிய பஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதிய பஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 23 Jan 2018 4:30 AM IST (Updated: 23 Jan 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூரில் புதிய பஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட் டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்,

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருப் பூரில் இருந்து கோவை, உடு மலை, ஈரோட்டில் உள்ள கல்லூரிகளுக்கு தினமும் பஸ்சில் சென்று மாணவ- மாணவிகள் படித்து வருகி றார்கள்.

பஸ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டதாக கூறி நேற்று காலை 7.30 மணி அளவில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் திரண்டனர். பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 கல் லூரிகளை சேர்ந்த மாணவர் கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள் அனைத்து அரசு பஸ்களிலும் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்தநிலையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென பஸ் நிலையத்தின் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பஸ்களையும் வெளியே வராமல் சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் மறியலில் பங்கேற்றனர். இதனால் பஸ் கள் வெளியே செல்ல முடிய வில்லை. இதனால் பி.என். ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். மறியல் காரண மாக பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தாசில்தார் கூறியதை தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் கூடி நின்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலைய வளாகத்திற்குள் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் கயல்விழி, உதவி கமிஷனர் அண்ணா துரை, வடக்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பிச்சையா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, நாங்கள் தினமும் கல்லூரிக்கு திருப்பூரிலிருந்து கோவைக்கு சென்று வருகி றோம். அப்போது பஸ் கட்டணம் ரூ.24 ஆக இருந்தது. இப்போது ரூ.37 ஆக அதி கரித்து உள்ளது. ஒரு மாதத் துக்கு 25 நாட்கள் கல் லூரிக்கு செல்கிறோம். இதனால் எங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக ரூ.650 செல வாகிறது. ஏற்கனவே நாங்கள் அரசு வழங்கும் உதவித்தொகை மூலமாக தான் படித்து வருகிறோம். எங்கள் குடும்பம் எளிமையானது. இந்த செலவை எங்களால் ஈடுகட்ட முடியாது. அதனால் அரசாங் கம் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என்றனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் 7 பேரை மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவல கத்துக்கு அழைத்து சென்ற னர்.

அந்த மாணவர்கள் கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் சாதனைகுறளிடம் மனு கொடுத்து முறையிட்டனர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதை குறைக்க வேண்டும். இலவச பஸ் பாஸ் மூலமாக 60 கிலோ மீட்டர் தூரத்துக்குள் அரசு பஸ்சில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து மீண்டும் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று மாணவர்களிடம் தெரி வித்ததை தொடர்ந்து அனை வரும் காலை 11 மணிக்கு மேல் கலைந்து சென்றனர். 

Next Story