உசிலம்பட்டியில் ரூ.6 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
உசிலம்பட்டியில் ரூ.6 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை நீதிபதி எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு நிதியிலிருந்து ரூ.6 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டப் பணிகள் நடக்க உள்ளது. அதில் 10.78 கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைத்தல், பேவர் பிளாக் அமைத்தல், வடிகால், மற்றும் சாக்கடையை சீரமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை விழா உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகில் எம்.எல்.ஏ. நீதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் நகராட்சி கமிஷனர் சுப்பையா, பொறியாளர் ரத்தினவேல், மேலாளர் முருகதாஸ், நகர் அ.தி.மு.க. செயலாளர் பூமா.ராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகரன், நகர் பேரவை மணிவண்ணன், உள்பட நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பணிகளை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். மேலும் சாலை ஓரங்களில் சாக்கடையில் உள்ள கழிவுகளை நகராட்சி மூலம் அகற்றப்பட்டது.
நிரந்தர தீர்வு
நிகழ்ச்சியின் போது சாக்கடைகள் மூடாமல் இருப்பதால் பொதுமக்களும், வணிகர்களும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர் என்று எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது அவர் கூறியதாவது- நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளுக்கு முன்னாள் அந்ததந்த கடை உரிமையாளர்கள் சாக்கடை மேல் சிமெண்டு சிலாப்புகளை தற்காலிகமாக போட்டுக் கொள்ள நகராட்சி மூலம் கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சாலை ஓரங்களில் உள்ள சாக்கடையின் மேல் பகுதியில் கான்கிரீட் அமைத்தால் சாக்கடையில் உள்ள கழிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய சிரமமாக இருக்கும் எனவே சிமெண்டு சிலாப்புகள் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நெடுஞ்சாலை துறைக்கு நகராட்சி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story