வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் சாலைமறியல் கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு
சேலம் மெய்யனூர் 18-வது வார்டு பகுதியில் வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடியை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில் நிலத்தை அ.தி.மு.க. வினர்ஆக்கிரமித்துள்ள தாகவும் குற்றஞ்சாட்டி னர்.
சேலம்,
தமிழகம் முழுவதும் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டது. அதில் வார்டுகளில் உள்ள சில பகுதி வாக்காளர்களை சம் பந்தமில்லாத வார்டு களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சேபனை எழுப்பப்பட்டு, அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி உள்ளதாக மாநகராட்சி ஆணையாளருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 18-வது வார்டுக் குட்பட்ட பனங்காடு,வன்னி யர்நகர், மெய்யக்கவுண்டர் தெரு, அர்த்தனாரி கவுண்டர் தெரு, புதுத்தெரு பகுதியில் வாக்காளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர், 3 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள 24-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர். பின்னர் மெய்யனூர் பிரதான சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெய்யனூர் ஊர்க்கவுண்டர் கணேசன் தலைமையில் அப்பகுதி மக்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜன் தலைமையிலான போலீசார், அங்கு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “18-வது வார்டில் வசிக்கும் வாக்காளர்கள் சிலரை அ.தி.மு.க.வினர் தூண்டுதலின் பேரில் 24-வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் மீண்டும் 18-வது வார்டிலேயே வாக்காளர்கள் பெயர் இருக்கும் வகையில் பட்டியலை சரிசெய்திட வேண்டும். மேலும் மெய் யனூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிலத்தை அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் வரை கோவில் திருவிழா வேண்டாம். இந்த கோவில் விழா நடந்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்” என்றனர். நீண்டநேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story