மின்வேலியில் சிக்கி கிராம உதவியாளர் பலி தந்தை-மகன்களை போலீஸ் தேடுகிறது
ஏர்வாடி அருகே மின்வேலியில் சிக்கி கிராம உதவியாளர் பலியானார். அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்ததாக தந்தை- மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏர்வாடி,
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 57). இவர் அருகில் உள்ள நம்பிதலைவன்பட்டயம் கிராமத்தில் கிராம உதவியாளராக (தலையாரி) வேலை பார்த்து வந்தார்.
நேற்று ஐந்து பனைக்காடு என்ற பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார். அங்கு அவரது வயலின் அருகில் தளவாய்புரத்தை சேர்ந்த பெருமாள் (48) என்பவருக்கு சொந்தமான வயலும் உள்ளது.
அந்த வயலில் காட்டு பன்றிகள் வருவதை தடுக்க அனுமதி பெறாமல் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அது மின்வேலி என்பதை அறியாமல் சுந்தரம் அதனை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் சுந்தரத்தை மின்சாரம் தாக்கியது. உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெருமாள், அவருடைய மகன்கள் அய்யப்பன், சந்திரன் ஆகியோர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுந்தரத்தின் உடலை மீட்டனர். ஒரு ஆட்டோவில் ஏற்றி சுந்தரத்தின் வீட்டு முன்பு வைத்து விட்டு சென்று விட்டனர்.
இதனை பார்த்த சுந்தரத்தின் மனைவி அன்னத்தாய் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெருமாள் அவரது நிலத்தில் அனுமதியில்லாமல் மின்வேலி அமைத்து இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக பெருமாள், அவருடைய மகன்கள் அய்யப்பன், சந்திரன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக திருக்குறுங்குடி வனத்துறையினரும் விசாரணை நடத்தி, மின்வேலிக்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள், கம்புகளை பறிமுதல் செய்தனர். மின்வேலியில் சிக்கி கிராம உதவியாளர் இறந்தது தொடர்பாக வனத்துறை சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்த சுந்தரத்துக்கு அன்னத்தாய் (56) என்ற மனைவியும், ஆனந்தி (24), முத்துச்செல்வி (19), இந்திரா (18) ஆகிய 3 மகள்களும், பிரசாந்த் (22) என்ற மகனும் உள்ளனர். மின்வேலியில் சிக்கி கிராம உதவியாளர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story