திருப்பூரில், 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

திருப்பூரில் 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.
திருப்பூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் தயானந்தன்(திருப்பூர்), சுந்தர்ராமன்(கோவை) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டுதோறும் பதவி உயர்வு பட்டியலை உரிய தேதியில் வெளியிட வேண்டும். நேரடியாக துணை தாசில்தாரை நியமனம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தொடங்கிவைத்தார்
திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் சண்முகவடிவேல் வரவேற்றார். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சிவஜோதி போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். மாவட்ட செயலாளர்கள் முருகதாஸ்(திருப்பூர்), அருள்முருகன்(கோவை), குருராகவேந்திரன்(ஈரோடு) ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானதம்பி, வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுசீலா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் பாக்கியம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் அந்தஸ்தில் உள்ளவர்கள் வரை பலரும் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்றார்கள். இதன்காரணமாக தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகங்கள் நேற்று ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. வருவாய்த்துறை தொடர்பான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாலையில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்து பேசினார். முடிவில் மத்திய செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நன்றி கூறினார். உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story