ரூ.3,600 கோடியில் இரட்டை ரெயில் பாதை திட்டம் ரெயில்வே இணை மந்திரி அடிக்கல் நாட்டினார்
மதுரை-தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே ரூ.3 ஆயிரத்து 600 கோடியில் செயல்படுத்தப்படும் இரட்டை ரெயில் பாதை திட்டத்துக்கு, நாகர்கோவிலில் நேற்று நடந்த விழாவில் ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் அடிக்கல் நாட்டினார்.
நாகர்கோவில்,
மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு (160 கிலோமீட்டர் தொலைவு) ரூ.1182.38 கோடி மதிப்பீட்டிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு (102 கி.மீ. தொலைவு) ரூ.1003.94 கோடி மதிப்பீட்டிலும், கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு (86.56 கி.மீ. தொலைவு) ரூ.1431.90 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.3,618.22 கோடி மதிப்பீட்டில் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
குமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான இந்த இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் 2, 3-வது நடைமேடைகளுக்கான எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு வசதி) தொடக்க விழா, இந்த ரெயில் நிலையத்துக்கான 100 சதவீத எல்.இ.டி. மின்விளக்கு வசதி திட்ட தொடக்க விழா, ‘வைபை‘ இணையதள வசதி தொடக்க விழா ஆகியவை நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரெஸ்தா வரவேற்றுப் பேசினார். மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், கப்பல் மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
இரட்டை ரெயில்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தும், நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலைய 2 மற்றும் 3-ம் நடைமேடைகளுக்கான எஸ்கலேட்டர் வசதி, எல்.இ.டி. மின்விளக்கு வசதி, ‘வைபை‘ வசதி ஆகியவற்றை தொடங்கி வைத்தும் ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகிலேயே மிகப்பெரிய போக்குவரத்து சேவை நிறுவனமாக இந்திய ரெயில்வே நிறுவனம் திகழ்கிறது. 65 ஆயிரம் கி.மீ. நீள ரெயில்பாதையை இது கொண்டுள்ளது. இதில் தென்னக ரெயில்வே 6 கோட்டங்களைக் கொண்டு செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு (நிர்பயா நிதி) திட்டத்தின்கீழ் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பரீட்சார்த்த முறையில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட 136 ரெயில் நிலையங்களில் இந்த திட்டப்பணிகள் ரெயில் டெல் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை சென்டிரல், எழும்பூர், திருச்சி, மதுரை, கோவை, கோழிக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய 7 முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த ஆண்டு பெண்களுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய மையங்கள் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் ரெயில் பயணிகளின் அடிப்படை வசதிக்காக ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.75 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வருகிற டிசம்பர் மாதத்துக்குள் மானாமதுரை- விருதுநகர், மானாமதுரை- மாயவரம், மானாமதுரை- திருச்சி ஆகிய 3 வழித்தடங்களில் இயங்கும் ரெயில் பெட்டிகளில் பயோ-டாய்லெட் (நவீன கழிப்பறை) வசதி ஏற்படுத்தப்படும். 115 தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரம் தென்னக ரெயில்வேயின் பல ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பயணிகள் மிகுந்த பயன் அடைந்துள்ளனர். அனைத்து ரெயில் நிலையங்களிலும் எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தும் பணி 100 சதவீதம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
தென்னக ரெயில்வே மூலம் பல்வேறு ரெயில் நிலையங்களில் ஏற்கனவே 204 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயின் 24 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி உள்ளது. மேலும் 29 ரெயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வசதி செய்யப்படும். கூடுதலாக 6 ரெயில் நிலையங்களில் குழந்தைகள் மீட்பு மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
தற்போது மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி ரெயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-நெல்லை-நாகர்கோவில் ரெயில்பாதை, கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரெயில்பாதை ஆகிய 3 பிரிவுகளில் மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை திட்டம் ரூ.3,618 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. விரைவில் இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே 90 சதவீத ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டன. இந்த ஆண்டு ஈரோடு, கரூர், திருச்சி வழித்தடம் மின்மயமாக்கப்படும். மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தென்னக ரெயில்வேயில் உள்ள அனைத்து வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் பேசினார்.
விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜயகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ் ஆகியோர் பேசினார்கள். குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் பிரகாஷ் புதானி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story