பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் மறியல் 101 பேர் கைது
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள், நாம் தமிழர் கட்சியினர் 101 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
மலைக்கோட்டை,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் திருச்சி மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 2-வது நாளாக திருச்சி கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மேல சிந்தாமணி பஜார் வழியாக சத்திரம் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் திருச்சி-கரூர் புறவழிச்சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதைத்தொடர்ந்து 4 மாணவிகள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை திருச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் திருச்சி-கரூர் புறவழிச்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மேலப்புலிவார் ரோட்டில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். தேவர் ஹால் அருகே சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேவர் ஹால் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து 3 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால்
அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. அதன்படி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 101 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள்
திருச்சி காஜாமலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு படித்து வரும் மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது அவர்களை நுழைவு வாசல் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 4 மாணவர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தனர்.
அதன் பிறகு வெளியில் வந்த மாணவர்கள் கூறும் போது, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் காஜாமலைக்கு பஸ்சில் வந்து செல்கிறோம். பஸ் கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு நாளைக்கு 80 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கூறினர். முன்னதாக இவர்கள் எம்.ஜி.ஆர். சிலை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மாற்றுப்பாதை வழியாக அனுப்பி வைத்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் மாணவர்கள் வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கல்லூரி நுழைவு வாசல் பூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசு கலை கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவ,மாணவிகள் நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்து அக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் அய்யப்பன் தலைமையில் வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட வந்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்ததும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபா, மாரிமுத்து உள்ளிட்ட போலீசாருடன் அங்கு விரைந்து சென்று கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து நெடுஞ்சாலைக்கு வர முடியாதவாறும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் இருக்கும் படியும் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து மாணவ,மாணவிகள் கல்லூரி நுழைவு வாயிலை மறித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதே கல்லூரியில் படிக்கும் விடுமுறையில் இருந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்கள் மூலம் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து கலந்து கொண்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசாரும் அக்கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களிடம் பேச்சு நடத்தி அவர்களை கலைந்து செல்ல வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story