20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல்லில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அவை நிறைவேற்றப்படாததால் திண்டுக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று திண்டுக்கல்-திருச்சி சாலையில் கல்லறைத் தோட் டம் அருகே 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பாலமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் மங்களபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் சுகந்தி, அன்பழகன், மணிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
20 அம்ச கோரிக்கைகள்
இதில் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்படி 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பிறப்பு-இறப்பு பதிவு செய்வதற்கு கோட்ட மற்றும் வட்ட அளவில் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
மேலும் வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியல் உரிய காலத்தில் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். வாட்ஸ்-அப் மூலம் அறிக்கை கேட்பதை தவிர்க்க வேண்டும். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டப்பணி) பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த துணை கலெக்டர்களை உடனே நியமிக்க வேண்டும். வறட்சி நிவாரணம், அம்மா திட்டம், இலவச வேட்டி- சேலை உள்ளிட்ட பணிகளுக்கான செலவுகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்காக வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து விட்டதால் வருவாய்த்துறை அலுவலகங்களில் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Tags :
Next Story