பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆண்டகளூர்கேட்டில் அரசு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் செய்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆண்டகளூர்கேட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
இதைத்தொடர்ந்து ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மனோகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு கூறினார்கள்.
பின்னர் மாணவர்கள் சாலைமறியலை கைவிட்டு கல்லூரியின் நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ் கட்டணத்தை வாபஸ் பெறக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story