ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்


ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பேரூராட்சி 8-வது வார்டு தாசன்புதூர் பகுதியில் பொதுப்பாதையை கோவில் நிலம் என்று கூறி ஒரு சமூகத்தினர் கற்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இது குறித்து மற்றொரு சமூகத்தினர் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் செய்து இருந்தனர். இரு தொடர்பாக ராசிபுரம் தாசில்தார் சாகுல்ஹமீது, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி, அத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் மற்றும் வருவாய் ஆய்வாளர் மகபூப்அகமது ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு நிலம் கோவில் நிலம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

தர்ணா போராட்டம்

இதைத்தொடர்ந்து வெண்ணந்தூர் போலீசார் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது தாசன்புதூர் பகுதி பொதுமக்கள் திரண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகே அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி ரேஷன்கார்டு மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கபோவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம், உதவிகலெக்டர் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி கூறினர். அதையொட்டி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story