தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பா.ஜனதா கட்சி சார்பில், தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் பங்கேற்று பேசினார்.

இதில் மாநில இளைஞரணி செயலாளர் எம்.நாகராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் கிருஷ்ணன், சிவப்பிரகாசம், தர்மபுரி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி தலைவர் நீலமேகம், நகர தலைவர் வேணுசெல்வம், நகர பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில், வட்டக்கிளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட தலைவர் பிரதாப், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபாலகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், சங்கத்தின் மாநில தணிக்கையாளர் நடராஜன் நன்றி கூறினார்

ஊத்தங்கரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, துணைத்தலைவர் பாரி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சுஜதா, சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன்பு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டக்கிளை நிர்வாகி பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சேகர், சுருளிநாதன், யோகராசு ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி, அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதே போல பாலக்கோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story