பஞ்சு மில்லில் தீ விபத்து; ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்


பஞ்சு மில்லில் தீ விபத்து; ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 25 Jan 2018 3:45 AM IST (Updated: 25 Jan 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சு மில்லில் தீ விபத்து; ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள பொய்யூர் இடையத்தான்குடி பிரிவு சாலையில் அழகுதுரை (வயது 55) என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் உள்ளது. இந்த மில்லில் நேற்று மாலை மின் மோட்டார் சூடாகி மின் வயர்கள் எரிந்துள்ளன. தொடர்ந்து, சில மின் மோட்டார்களும் அருகிலுள்ள பஞ்சு மூட்டைகளும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்கும் உபகரணங்கள் மூலம் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தடுத்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. 

Next Story