கோவிலில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருட்டு
கரூர் அருகே பண்டரிநாதன் கோவிலில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலையையும், உண்டியலை உடைத்து பணத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
கரூர்,
கரூர் அருகே பெரியகுளத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பண்டரிநாதன்(பெருமாள்) மூலவர் சன்னதியும், ருக்மணி சன்னதியும், இதர பிற சன்னதிகளும் உள்ளன. கோவில் முன்பு இரும்பு கம்பிகளால் ஆன கதவு உள்ளது. பிரதான நுழைவுவாயிலில் மரக்கதவு அமைக்கப்பட்டுள்ளது.பூசாரி வாசுதேவன், கோவில் அருகே உள்ள வீட்டில் தங்கி உள்ளார். தினமும் அவர் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிவடைந்ததும், நடையை சாத்தி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடையை திறக்க பூசாரி வாசுதேவன் வந்தார்.
அப்போது கோவில் சுற்றுவளாகத்தில் உள்ள இரும்பு கதவை திறந்து உள்ளே சென்றபோது, நுழைவுவாயிலில் மரக்கதவில் இருந்த 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. உடைக்கப்பட்ட பூட்டுகள் கோவில் உள்ளே கிடந்தன. இதனை கண்ட வாசுதேவன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டு வாயிற் பகுதி திறந்து கிடந்தது. மேலும் மூலவர் சன்னதியில் ஐம்பொன்னால் அமைக்கப்பட்டிருந்த உற்சவர் சிலை திருடுபோய் இருந்தது. இதனால் அவர் மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வாசுதேவன் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். மேலும் வெங்கமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
திருடுபோன ஐம்பொன் சிலை 1¾ அடி உயரம், ¾ அடி அகலம், 40 கிலோ எடை இருக்கும் எனவும், அதன் மதிப்பு ரூ.3 லட்சம் எனவும் கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் அந்த சிலை அமைக்கப்பட்டு 39 ஆண்டுகள் ஆனதாகவும் கூறினர். திருவிழா காலங்களில் அந்த ஐம்பொன் சிலையில் தான் சாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். இந்த சிலை மூலவர் சன்னதியில் உற்சவர் சிலையாக இருந்ததால் பக்தர்களும் வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும், கோவில் உண்டியலில் இருந்த பணமும் திருடுபோய் இருந்தது.
சிலை திருடுபோன சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மர்மநபர்கள் கோவிலில் இருந்து வெளியே வரும்போது சுற்றுச்சுவர் கதவில் இருந்து சிலையை தரையில் தூக்கிப்போட்டதற்கான தடயம் அந்த இடத்தில் இருந்தது. மேலும் ஐம்பொன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த அணிகலன்களின் துகள்கள் சிதறி கிடந்தன. அந்த துகள்களை போலீசார் சேகரித்தனர். இந்த நிலையில் கோவிலில் ஐம்பொன் சிலை திருடுபோன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பொன் சிலை திருடுபோன கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சிலை திருட்டு தொடர்பாக வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story